முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 10

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 10

கரோலஸ் லின்னேயஸ் நினைவு தினம்

(மே 23, 1707 – ஜனவரி 10, 1778)

  • சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர்.
  • இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார்.
  • புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே.
  • தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
  • எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை யென அழைக்கப்படுகிறார்.
  • “கார்ல் லின்னேயஸ்”, “கரோலஸ் லின்னேயஸ்”, கார்ல் வொன் லின்னே, “கார்ல் லின்னே” போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார்.

வரலாறு:

  • ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் கரோலஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார்.
  • இந்த ராஷல்ட் (Råshult) என அழைக்கப்படும் பகுதி, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (Småland) மாகாணத்தில் உள்ள Älmhult Municipality இல் அமைந்துள்ளது.

ஆராய்ச்சி:

  • தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாது புவியியல் பற்றியும் எண்ணற்ற குறிப்புகளை எழுதினார்.
  • இந்த ஆராய்ச்சியின் முடிவில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வகை தாவர இனங்களை அடையாளம் கண்டார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை லின்னேயஸ் எழுதினார்.
  • அதன்பின், தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார்.
  • பிறகு, நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றார்.

மறைவு:

  • ஸ்வீடன் மன்னர், கரோலஸ் லின்னேயஸுக்கு 1761 இல் சர் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
  • நவீன சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், தற்கால அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கரோலஸ் லின்னேயஸ் தம் 71-வது வயதில் (1778) மறைந்தார்.

நிகழ்வுகள்

  • 1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கைகாவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
  • 1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
  • 1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின்அரசுத்தலைவர் ஆனார்.
  • 1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
  • 1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
  • 2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!