முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-3

0
முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-2
அறிஞர் அண்ணா நினைவு தினம்

காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969)

 • இந்தியஅரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார்.பரவலாகஅவர் அறிஞர்அண்ணா என்றே அறியப்பட்டார்.
 • இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக் கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

வாழ்க்கை:

 • அண்ணாதுரை, காஞ்சீபுரத்தில், நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.
 • சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.

கல்வி

 • தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

பேச்சாற்றல்

 • தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர்.
 • இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார்.
 • தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.
 • அண்ணாதுரை, நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் .

இறுதிக்காலம்

 • மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 3 பிப்ரவரி 1969 ல் காலமானார்.
 • அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
 • பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.

ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.

நிகழ்வுகள்
 • 1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
 • 1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
 • 1900 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியியலாளர்
 • 1944 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (இ. 2004)
 • 1963 – ரகுராம் கோவிந்தராஜன், இந்தியப் பொருளியல் அறிஞர், கல்வியாளர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here