முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 22
தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம்
- தில்லையாடி வள்ளியம்மை பெப்ரவரி 22, 1898 அன்று பிறந்தவர்.
- தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி ஆவார்.
- இறப்பு : பெப்ரவரி 22, 1914 அன்று இறந்தார்.
சியார்ச் வாசிங்டன் பிறந்த தினம்
- சியார்ச் வாசிங்டன் பெப்ரவரி 22, 1732 அன்று பிறந்தவர்.
- இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார்.
- விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.
- இறப்பு : டிசம்பர் 14, 1799 அன்று இறந்தார்.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank
கஸ்தூரிபாய் காந்தி நினைவு தினம்
- கஸ்தூரிபாய் ஏப்ரல் 11, 1869 அன்று பிறந்தவர்.
- மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார்.
- கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர்.
- காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.
- இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.
- இறப்பு : பெப்ரவரி 22, 1944.
உலக சிந்தனை நாள்
- உலக சிந்தனை தினம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 அன்று கொண்டாடப்படுகிறது, 146 நாடுகளில் இருந்து பெண் சாரணர்கள் மற்றும் பெண் வழிகாட்டிகள் உலக சிந்தனை நாளை கொண்டாடுகின்றன.
- 2018 உலக சிந்தனை தினம் தீம் “தாக்கம்”.
- “ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதன் பொருள் ஏதோ அல்லது யாரோ ஒரு வலுவான விளைவை கொண்டிருக்கும்”.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




