முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 12

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 12

ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள் 

  • ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர்.
  • அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.
  • 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

இளமை

  • அவரது தந்தை தாமஸ் லிங்கன் , தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks).
  • பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது.
  • தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.

பணிகள்

  • தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார்.
  • அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர்ஆனார்
  • 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.

அரசியல்

  • 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
  • 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிமை முறை ஒழிப்பு

  • பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர்.அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.
  • ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

மக்களாட்சி விளக்கம்

  • “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும்.
  • 1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார்.

நினைவகங்கள்

  • 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ந்தேதி லிங்கனின் உயிர் பிரிந்தது.
  • நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது.
  • லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!