முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 28

0
428

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 28

திருபாய் அம்பானி பிறந்த தினம்

பிறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் குஜராத்திலுள்ள மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடா என்னுமிடத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி, 1932 ல் பிறந்தார்.

சிறப்புகள்:

 • திருபாய் அம்பானி  அவர்கள் முதலில் 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
 • இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர்.
 •  தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து “மஜின்” என்ற நிறுவனத்தை துவக்கினார்.
 • மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது.
 • துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார்.
 • 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது.வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.
 • இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது.
 • 1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது.
 • காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல்தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது.
 • அவர் மீது முறையற்ற செயல்களில் ஈடுபட்டார், அரசாங்க கொள்கைகளை தனது சொந்த தேவைகளுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கிக் கொண்டார்.
 • ஊடகங்கள் வணிக-அரசியல் தொடர்பு குறித்து பேச முற்படுகின்றன என்றாலும், நாடெங்கிலும் புயல் கிளப்பும் ஊடகப் புயல்களில் இருந்து எப்போதும் அம்பானியின் வணிகக்குடும்பம் கூடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும் பெற்று வந்திருக்கிறது.

விருதுகள்:

 • நவம்பர் 2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கெம்டெக் பவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு அமைப்புகள் அவருக்கு ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ விருதினை வழங்கின.
 • 2000, 1998 மற்றும் 1996 – ஆசியாவீக் இதழ் வெளியிட்ட ‘பவர் 50 -ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.
 • ஆகஸ்டு 2001 – வாழ்நாள் சாதனை க்காக தி எகனாமிக் டைம்ஸ் பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டுக்கான விருது வழங்கியது.
 • இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (FICCI), திருபாய் அம்பானியை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக த் தேர்வு செய்தது.
 • டைம்ஸ் ஆஃப் இந்தியா 2000-ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று அவரை “நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக” தேர்வு செய்தது.

இறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

ரத்தன் டாடா பிறந்த தினம்

பிறப்பு:

ரத்தன் டாடா அவர்கள் இந்தியாவிலுள்ள பம்பையில் டிசம்பர் 28 ஆம் தேதி, 1937 ல் பிறந்தார்.

சிறப்புகள்:

 • ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில்பிஎஸ்சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார்.
 • பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்.
 • 1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார்.
 • 1977 ஆம் ஆண்டில், டாடா குழும வசமிருந்த எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றது.
 • 1981 ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார்.
 • 1991 ஆம் ஆண்டில், அவர் ஜே.ஆர்.டி. டாடா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
 • டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
 • இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கிறது.
 • ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தை யில் பட்டியலானது. 1998 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.
 • ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு தானுந்தை மக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாடாவின் நீண்ட காலக்கனவாக இருந்தது.
 • ஒரு இலட்சம் ருபாய் விலையில் ஒரு தானுந்தியை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் தானுந்தை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் “ஒரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே” என்றும் கூறினார்.

விருதுகள்:

 • 26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
 • 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
 • 2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.
 • மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
 • 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
 • 2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Join Us on FB :  English – Examsdaily   Twitter – Examsdaily

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here