முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 27

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 27

லூயி பாஸ்ச்சர் பிறந்த தினம் 

பிறப்பு:

லூயி பாஸ்ச்சர் அவர்கள் பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27ஆம் தேதி, 1822 ல் பிறந்தார்.

சிறப்புகள்:

  • லூயி பாஸ்ச்சர் அவர்கள் நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர்.
  • வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.
  •  நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
  • தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர்.
  • நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது.
  • இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.
  • நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர்.
  • தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார்.
  • வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார்.
  • இவரது கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது.

இறப்பு:

லூயி பாஸ்ச்சர் அவர்கள் 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!