முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 23

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 23

சரண் சிங் பிறந்த தினம்

பிறப்பு:

  • சரண் சிங் அவர்கள் உத்தரபிரதேசத்திலுள்ள மீரட் மாவட்டத்தில் டிசம்பர் 23ஆம் தேதி, 1902ல் பிறந்தார்.

செயல்கள்:

  • சரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார்.
  • பாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார்.
  • 1979-ம் ஆண்டு ஜூலை மாதம், பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையே, நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார்.
  • சரண் சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.
  • இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார்.
  • ‘ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார்.
  • தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இறப்பு:

தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தினம் 

  • விவசாயிகள் தினம்  இந்தியாவில், டிசம்பர் 23 ஆம் நாள் விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.
  • விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்திய விடுதலை போரட்ட வீரர் கக்கன் நினைவு தினம் 

பிறப்பு:

 கக்கன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாவட்டத்தில் சூன்  18ஆம் தேதி, 1907ல் பிறந்தார்.

சிறப்புகள்:

  • கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார்.
  • ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.
  • கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்.
  • கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன.
  • கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்.
  • இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.

இறப்பு:

1981ம் ஆண்டு திசம்பர் மாதம் 23 ஆம் நாள் உடல்நலக் குறைவால் இயற்கை ஏய்தினார் .

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!