முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 18

0
224

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 18

பிறப்பு:

 • ஜெ.ஜெ. தாம்சன் டிசம்பர் 18, 1856 ம் ஆண்டில் பிறந்தார்.

 • சர் ஜோசப் ஜான் தாம்சன் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.
 • இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர்.
 • நவீன அணு இயற்பியலின் தந்தை‘ எனப் போற்றப்படுபவர்.
 • நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.
 • இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக ‘ஆதம்சு பரிசு’ மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.
 • இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இறப்பு

 • ஆகஸ்ட் 30, 1940
ஆறுமுக நாவலர் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஆறுமுக நாவலர் டிசம்பர் 18, 1822 ம் ஆண்டில் பிறந்தார்.

 • ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர்.
 • தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர்.
 • தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர்.
 • திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

இறப்பு

 • டிசம்பர் 5, 1879
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here