முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 11

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 11

மகாகவி பாரதியார் பிறந்த தினம்

பிறப்பு

  • சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882ம் ஆண்டில் பிறந்தார்.

  • சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
  • தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
  • இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
  • பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர்.
  • இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

இறப்பு

  • செப்டம்பர் 11, 1921

விசுவநாதன் ஆனந்த் பிறந்த தினம்

பிறப்பு:

  • விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11, 1969 ம் ஆண்டில் பிறந்தார்.

  • விஸ்வநாதன் ஆனந்த் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார்.
  • FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
  • உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008).
  • இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!