முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 07

0

தேசிய கைத்தறி தினம்

By Deepraj [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html), CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/) or CC BY 2.5 (https://creativecommons.org/licenses/by/2.5)], from Wikimedia Commons
  • நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசியக் கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசியக் கைத்தறி தினம் 2015ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நிய துணிகளை புறக்கணிக்கும் விதமாக ‘சுதேசி இயக்கம்’ 1907ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்டது.
  • அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமான கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்.
By Thivasel [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆகஸ்ட் 7, 1925ல் தமிழ்நாட்டிலுள்ள  கும்பகோணத்தில் பிறந்தார்.
By Dhirajchvn7 [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல் அறிவியலாளர்.இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார்.
  • இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர்.
  • எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் என்னும் நிறுவனத்தின் அமைப்பாளர்.
  • இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர்.
  • வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.
Biswarup Ganguly [GFDL(http://www.gnu.org/copyleft/fdl.html), CC BY 3.0 (https://creativecommons.org/licenses/by/3.0), GFDL(http://www.gnu.org/copyleft/fdl.html) or CC BY 3.0 (https://creativecommons.org/licenses/by/3.0)], from Wikimedia Commons

விருதுகள்:

  • இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
  • தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.
  • பெருமைமிகு மகசேசே விருது பெற்றவர்.
  • கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது பெற்றவர்.

இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்

பிறப்பு:

  • மே 7, 1861ல் பிறந்தார்.
By Cherishsantosh [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளர்.
  • விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  • அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன.
  • இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான ஜன கண மன மற்றும்அமர் சோனார்”, இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது.
  • 1877ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன.

விருதுகள்:

  • 1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக நோபல் பரிசு வென்று ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர்.
  • ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
See page for author [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • ஆகஸ்ட் 7, 1941 ல் இறந்தார்.

வாணிதாசன் நினைவு தினம்

பிறப்பு:

  • ஜூலை 22, 1915ல் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார்.

பெற்றோர்: அரங்க திருக்காமு, துளசியம்மாள்

இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு

சிறப்பு:

  • புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
  • இவர் ‘ரமி’ என்னும் புனைப்பெயர் கொண்டவர்.
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர் “தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்சு குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் பாரதி நாள்.
  • பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்.
  • குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே. ‘கவிஞரேறு’, ‘பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

வேறு பெயர்கள்:

  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்

நூல்கள்:

  • கொடிமுல்லை
  • இன்ப இலக்கியம்
  • பொங்கல் பரிசு
  • இரவு வரவில்லை
  • வாணிதாசன் கவிதைகள்
  • இனிக்கும் பாட்டு

இறப்பு:

  • ஆகஸ்ட் 7, 1974ல் இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!