முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் -06

0
163

ஹிரோசிமா தினம்

By US government, Post-Work: User:W.wolny [Public domain], via Wikimedia Commons
 • இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது.
 • குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின.
 • 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஆகஸ்ட் 6, 1881ல் ஸ்காட்லாந்து நாட்டில்பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.
 • ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார்.
 • ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.

விருதுகள்:

 • 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 • ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944ம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 • 1999ம் ஆண்டில் டைம் இதழில் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.
 • 2000ம் ஆண்டு சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று இதழ்களில் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.
 • 2002ம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட பிரிட்டிஷின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.
 • ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது.
By Calibuon at English Wikibooks, cropped by User:AlanM1 (File:Alexander Fleming.jpg) [CC0], via Wikimedia Commons

இறப்பு:

 • மார்ச் 11, 1955ல் இறந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

 • 1961 – வஸ்தோக் 2 முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.
 • 1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண் கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here