முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 31

0

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 31

பிறந்ததினம்

மரியா மாண்ட்டிசோரி

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

இறப்பு
பிராங்க் பெ. மெக்டொனால்டு

பிராங்க் பெத்தூன் மெக்டொனால்டு (Frank Bethune McDonald) ( மே 28, 1925 – ஆகத்து 31, 2012) என்பவர் ஓர் அமெரிக்க வானியற்பியல் அறிஞர் ஆவார். இவர் விண்வெளி ஆராய்ச்சி விமானங்களுக்குத் தேவையான உபகரணங்களை வடிவமைப்பதற்கு உதவியாக இருந்தார். அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் பல திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளுக்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்கினார். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இத்திட்டங்களுக்கு தலைமை விஞ்ஞானியாகச் செயல்பட்டார்.

இவருடைய பணிக்காலத்தில் நாசாவின் ஒன்பது தன்னேற்புத் திட்டங்களுக்கு திட்ட விஞ்ஞானியாகவும், பதினைந்து விண்வெளி சோதனைகளுக்கு முதன்மை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். முந்நூறுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டில் தேசிய அறிவியற் கழகத்தின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

சிறப்பு நாள்
  • விடுதலை நாள் (கிர்கிசுத்தான் 1991)
  • விடுதலை நாள் (மலாயா, 1957)
  • விடுதலை நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, 1962)
  • தேசிய மொழி நாள் (மல்தோவா)

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!