முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 29

0
இந்திய தேசிய விளையாட்டு நாள்
  • இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும்.
  • தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
  • 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.
கே. ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் 
  • கே. ராதாகிருஷ்ணன் (பிறப்பு 29 ஆகத்து 1949) ஓர் இந்தியஅறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர் ஆவார்.
  • இந்தியமாநிலம் கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்தவர்.
  • இந்திய புவிஇயற்பியல் ஒன்றிய வாழ்நாள் அங்கத்தினராகவும் உள்ளார்.
  • நுண்கலைகளிலும் தேர்ச்சிபெற்ற இவர் கருநாடக இசைமுறையில் பாடவும் கதகளி நடனமும் தெரியும்.
சர்வதேச அணு ஆயுதச் சோதனை எதிர்ப்பு நாள்
  • உலகம் முழுக்க நடத்தப்படும் அணு ஆயுதச் சோதனைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
  • இதன் விளைவுகள் பற்றியும் பரவலைத் தடுக்கவும், ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள்
  • பாப் இசை மன்னன் நடனத்துடனான பாடல்களை ஆல்பங்களாக வெளியிட்டு, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றார்.
  • கிராமி விருதுகள், கின்னஸ் உலக சாதனைகள் உட்பட பல இசை விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!