முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 14

1

நிகழ்வுகள்

  • 1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
  • 2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
  • 2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
  • 2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்

ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் (Richard R. Ernst, பிறப்பு: ஆகஸ்ட் 14, 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயல்வேதியியல் அறிவியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவர். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விண்டேர்தரில் பிறந்தார். எர்ன்ஸ்ட் 1957 ம் ஆண்டு ஜூரிச்சில் உள்ள நடுவண் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து இளநிலை வேதியியல் பட்டம் பெற்றார் பின்னர் 1962-ம் ஆண்டு இயற்வேதியியல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் மூனிக் மற்றும் சூரிக் பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எர்ன்ஸ்ட்க்கு 1991 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது.

இறப்பு

எட்வர்ட் குபேர்

கிளெமென்செடு எடுவர்ட் குபேர் (Clemencedu Edouard Goubert, சூலை 29, 1894 – ஆகத்து 14, 1979) புதுச்சேரியின் முன்னாள் மேயரும் முதல் முதலமைச்சரும் ஆவார். சூலை 1, 1963 முதல் செப்டம்பர் 11, 1964 வரை முதல்வராக பணியாற்றினார். துவக்கத்தில் பிரெஞ்சு ஆட்சி நீட்டிப்பிற்கு ஆதரவாக இருந்த குபேர் பின்னர் இணைப்பிற்கான போராட்டத்தில் இணைந்தது பிரெஞ்சு ஆட்சிப்பகுதிகள் விடுதலை அடைந்த இந்தியாவுடன் இணைய உறுதுணையாக அமைந்தது.

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (பாக்கிஸ்தான், 1947)

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!