முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 12

0

உலக யானைகள் தினம்

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறப்பு

விக்கிரம் சாராபாய்

விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

சிறப்பு நாள்

  • அனைத்துலக இளையோர் நாள் (ஐநா)

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!