முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 11

0
108
Beautiful green grass PowerPoint background Available in 960x720

நிகழ்வுகள்

  • 1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
  • 2003 – ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
  • 2003 – ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
  • 2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

பிறப்புகள்

ஸ்டீவ் வாஸ்னியாக்

ஸ்டீவ் வாஸ்னியாக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார். 1970களில் ஆப்பிள் – 1 மற்றும் ஆப்பிள் – 2 ஆகிய கணினிகளைக் தனியாக வடிவமைத்ததுடன், சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கியவர். பின்னாளில் இக்கணினிகளின் கண்டுபிடிப்பு, நுண்செயலி வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன.

இறப்புகள்

ஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை

ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை (1864 – ஆகஸ்ட் 11, 1920) சைவ மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். பேச்சாளர், வழக்கறிஞர், சில காலம் நீதிபதியாக பணியாற்றினார். ஆங்கிலத்தில் சைவசித்தாந்த நூல்களை எழுதினார்.

  • நல்லுசாமிப்பிள்ளை சொந்தசெலவில் “சித்தாந்த தீபிகை” என்ற சைவ இதழை நெடுங்காலம் நடத்தினார். அதில் சைவ சித்தாந்தத்தை நவீன நோக்கில் விரிவாக விளக்கினார்.
  • Studies on Saiva Sithaantha எனும் சைவ சித்தாந்தம் குறித்த ஆங்கில நூலையும் எழுதினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here