முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 04

0

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 04

வரலாற்றில் இன்று

  • 1984 – அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1987 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
  • 1991 – “ஓசியானோஸ்” என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
  • 2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.
  • 2006 – ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2006 – வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
  • 2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்பு

பராக் ஒபாமா

  • பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார்.
  • 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.
  • அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இறப்பு
பொன். கணேசமூர்த்தி

  • பொன். கணேசமூர்த்தி (இறப்பு: ஆகஸ்ட் 4, 2006, யாழ்ப்பாணம்), தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.
  • தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!