முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 03

0

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 03

வரலாற்றில் இன்று

  • 1975 – மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1990 – காத்தான்குடித் தாக்குதல் 1990 கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

தோர்ப்சான் சிக்கிலேண்டு

  • தோர்ப்சான் சிக்கிலேண்டு (Torbjørn Sikkeland) (3 ஆகத்து 1923 முதல் – 7 நவம்பர் 2014) என்பவர் நார்வே நாட்டு வேதியியலாளரும், உட்கரு இயற்பியலாளரும், கதிர்வீச்சு உயிரியற்பியலாளரும் ஆவார்.
  • இவர் நார்வேயின் வார்டெய்க் என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • இவர் நொபிலியம், இலாரென்சியம் ஆகியவற்றின் யுரேனியப் பின்-தனிமங்களைக் கண்டுபிடித்த இலாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார்.
  • நார்வே நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 1969 முதல் 1993 வரை அங்கு பணியாற்றினார்.  நார்வேயின் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

இறப்பு

தேவதாஸ் காந்தி

  • தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார்.
  • இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார்.
  • இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார்.
  • இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!