முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 02

0
170
ppt background slides powerpoint slide background templates best

வரலாற்றில் இன்று

 • 1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
 • 1973 – மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1980 – இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1989 – யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
 • 1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
 • 2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.

பிறப்பு

சூல்ஸ் ஹொஃப்மன்

 • சூல்ஸ் ஹொஃப்மன் (Jules A. Hoffmann, பிறப்பு: ஆகத்து 2, 1941) லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு உயிரியலாளர் ஆவார்.
 • பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
 • 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இறப்பு

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

 • அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 – ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார்.
 • தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.” இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.
 • இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here