முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 01

0
262

வரலாற்றில் இன்று

 • 1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
 • 1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
 • 1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
 • 1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 • 2004 – பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.
 • 2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
 • 2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.

பிறப்பு

குர்மான்பெக் பாக்கியெவ்

 • குர்மான்பெக் சலீயெவிச் பாக்கியெவ் (Kurmanbek Saliyevich Bakiyev, பிறப்பு: ஆகஸ்ட் 1, 1949) கிர்கிசுத்தானின் இரண்டாவது அரசுத்தலைவராக இருந்தவரும், அரசியல்வாதியும் ஆவார்.
 • 2005 இல் நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து குடியரசுத் தலைவராக இருந்த அஸ்கார் அக்காயெவ் பதவியிழந்ததை அடுத்து பாக்கியெவ் நாட்டின் பதில் தலைவராக 2004 மார்ச் 24 இல் சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • ஏப்ரல் 2010 இல் நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, நாட்டில் இருந்து வெளியேறினார்.

இறப்பு

ரிச்சர்ட் குன்

 • ரிச்சர்ட் குன் (Richard Kuhn, டிசம்பர் 3, 1900 – ஆகஸ்ட் 1, 1967) ஒரு ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல் அறிவியலாளர்.
 • இவர் 1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here