முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-8

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-8

மங்கள் பாண்டே நினைவு தினம் 

பிறப்பு:

 •  ஜூலை 19,1827ல் பிறந்தார்.
By IndianCow at English Wikipedia [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • மங்கள் பாண்டே என்பவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர்.
 • இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில்  ஒருவர்.
 • கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
 • உத்தரப் பிரதேசத்திலுள்ள நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்.
 • 1849ல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.
 • இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984ல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது.

இறப்பு:

 • ஏப்ரல் 8, 1857ல் இறந்தார்(29 வயது).

பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம் 

பிறப்பு:

 •  ஜூன் 27, 1838ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • ஒரு வங்காள எழுத்தாளர்,கவிஞர்,இதழியலாளர் ஆவார்.
 • இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது.
 • இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார்.
 • இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
 • பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும்.
 • லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.
By Romesh Chunder Dutt [Public domain], via Wikimedia Commons

நூல்கள்:

 • இவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865ம் வருடம் வெளியானது.
 • கபால குந்தளம்(1866)
 • மிர்ணாளினி
 • தேவி சௌதாரிணி
 • ஆனந்த மடம்
 • அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு:

 • ஏப்ரல் 8, 1894ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here