முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-30

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-30

சர்வதேச ஜாஸ் தினம்

  • ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
  • ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது.
  • கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது.
  • ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது.
  • இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.

ஹிட்லர் நினைவு தினம் 

பிறப்பு:

  • ஏப்ரல் 20, 1889 ல் பிறந்தார்.

சிறப்பு:

  • ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
  • பின்பு 1934 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை  ஜெர்மனி நாட்டின் தலைவராக இருந்தார்.
  • ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.
  • இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
  • யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார்.
  • போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார்.
  • மெயின் கேம்ப் என்ற புத்தகத்தை எழுதினார்.
  • இவர் மிக சிறந்த ஓவியர்.
  • முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார்.

இறப்பு:

  • 30-ஏப்ரல் 1945ல் இறந்தார்.

தாதாசாகெப் பால்கே பிறந்த தினம்

பிறப்பு:

  • தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஏப்ரல் 30, 1870 ல் பிறந்தார்.

சிறப்பு:

  • அவர் ஒரு இந்திய தயாரிப்பாளர்-இயக்குனர்-திரைக்கதை ஆசிரியர்.
  • இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
  • தாதா சாகெப் பால்கே இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

  • துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஒரு மராத்தி மொழி பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு திறமையான அறிஞர்.
  • 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
  • பால்கே ,பரோடா மஹாராஜா சஜஜிரா பல்கலைக்கழகத்தில் – சிற்பம், பொறியியல், ஓவியம், மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைப் படித்தார்.

வாழ்க்கை:

  • பால்கே, 19 ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் 95 திரைப்படங்களையும், 26 குறும்படங்களையும் தயாரித்தார்.
  • அவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகள்:
    1. மோகினி பஸ்மசூர் (1913)
    2. சத்யவான் சாவித்ரி (1914)
    3. லங்கா தஹான் (1917)
    4. ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா (1918)
    5. காலியா மார்டன் (1919).

தாதாசாகெப் பால்கே விருது:

  • சினிமா வாழ்நாள் பங்களிப்புக்காக தாதாசாஹேப் பால்கே விருது, 1969 ஆம் ஆண்டு அவரை கௌரவிக்க  இந்திய அரசாங்கத்தால்  நிறுவப்பட்டது.
  • இந்திய சினிமாவில் மிகுந்த மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
  • நாட்டில் திரைப்படத்துறையினருக்கு மிக உயர்ந்த உத்தியோகபூர்வ அங்கீகாரம் இது.
  • 1971ம் ஆண்டில் இந்திய போஸ்ட்டில் அவரது சாயல் கொண்ட ஒரு தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
  • தாதாசாஹேப் பால்கே அகாடமி மும்பையின் கௌரவ விருது 2001ம் ஆண்டில் இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இறப்பு:

  • பிப்ரவரி 16, 1944ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!