முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-28

0
310

உ வே சாமிநாத ஐயர் நினைவு தினம் 

பிறப்பு:

 • பிப்ரவரி19,1855 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • உ.வே.சா. சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.
 • இவர் ஒரு தமிழறிஞர்.
 • அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்
 • உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
 • உ.வே.சாவின் ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

நூல்கள்:

 • உ.வே.சா பல செய்யுள்களையும் நூல்களையும் இயற்றியுள்ளாா்.
 • கலை மகள்துதி
 • திருலோகமாலை
 • ஆனந்தவல்லியம்மை
 • பஞ்சரத்தினம்

பதிப்பித்த நூல்கள் சில:

 • சீவக சிந்தாமணி
 • பத்துப்பாட்டு
 • சிலப்பதிகாரம்
 • புறநானூறு
 • மணிமேகலை.முதன் முதலாக உ.வே.சா உரை எழுதிய நூல் மணிமேகலை.

பட்டங்கள்:

 • மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.
 • இந்திய அரசு பிப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

இறப்பு:

 • ஏப்ரல் 28, 1942 ல் இறந்தார்.

உலக கால்நடை தினம்

 • உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு (Jim Edward) மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
 • இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
 • 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை தினமாகக் கொண்டாடி வருகிறது.
 • உலக கால்நடை மருத்துவ சங்கம், 2000 ம் ஆண்டு முதல் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை மருத்துவ தினமாக அறிவித்தது.

வேலையின்போது பாதுகாப்புக்கும் நலனுக்குமான உலக தினம்

 • வேலைத் தொடர்பான விபத்துக்கள் நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்புஇ நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது.
 • அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here