முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 26

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 26

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

 • உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
 • மேலும் 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது.
 • மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் மக்களின் வேலைகளை இலகுவாக்க சாதனங்களை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
 • பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது.
 • பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில் பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும்.

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை நினைவு தினம்

பிறப்பு:

 • மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ஏப்ரல் 4, 1855 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.
 • இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர்  போன்ற  பல பட்டங்கள்  கிடைத்தன.
 • சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியர்  கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்.
 • கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலஆராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
 • மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

வெளியிட்ட நூல்கள்:

 • நூற்றொகை விளக்கம் (1888)
 • மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
 • திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)

இறப்பு:

 • பேராசிரியர் சுந்தரம் பிள்ளை  1897 ஏப்ரல் 26(42 வயது ) அன்று மறைந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here