முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 25

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 25

உலக மலேரியா தினம்

  • ஏப்ரல் 25ம் தேதியான இன்று உலக மலேரியான தினமாக, அனுசரிக்கப்படுகிறது.
  • மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

  • ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.
  • மலேரியா என்பது பிளாஸ்மோடியம் வகையைச் சேர்ந்த ஒட்டுண்ணி புரோட்டோஸோவான்ஸ் (ஒற்றை-உயிரணு நுண்ணுயிரிகளின் ஒரு குழு) காரணமாக மனிதர்களையும் பிற விலங்குகளையும் பாதிக்கும் ஒரு கொசு-தொற்று நோய் தொற்று ஆகும்.
  • அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.
  • 1880 ஆம் ஆண்டில் சார்லஸ் லாவ்ரன் முதன் முதலாக இரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணிகள் இருப்பதை காட்சியாகக் காண்பித்தார்.

புதுமைப்பித்தன் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஏப்ரல் 25, 1906 ல் பிறந்தார்.

இயற்பெயர்: சொ. விருத்தாசலம்.

சிறப்பு:

  • மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
  • 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
  • இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது.
  • 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின.
  • மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார்

புனைப்பெயர்கள்:

  • சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு.

புதுமைப்பித்தனின் படைப்புகள்:

  • இணையற்ற இந்தியா
  • அதிகாரம் யாருக்கு
  • செல்லம்மாள்
  • கடவுளின் பிரதிநிதி
  • வழி
  • இரண்டு உலகங்கள்
  • பயம்
  • அம்மா
  • கனவு

இறப்பு:

  • ஜூன் 30, 1948 ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!