முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 24

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 24

ஜி. யு. போப் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 24, 1820ல் கனடாவில்  பிறந்தார்.

சிறப்பு:

 • கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
 • இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
 • 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
 • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
 • தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

மூன்று இறுதி விருப்பங்கள்:

 • இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.
 • தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.
 • கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.

இறப்பு:

 • பிப்ரவரி 12,1908ல் இறந்தார்.

உலக ஆய்வக விலங்குகள் தினம்

 • உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day For Animals In Laboratories அல்லது World Lab Animal Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்படுகிறது.
 • இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

 • உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.
 • ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.

சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 24, 1973 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • சச்சின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார்.
 • சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
 • ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக  இருநூறு  ஓட்டங்களை எடுத்தவர்  ஆவார். சர்வதேசப் போட்டிகளில் நூறு முறை நூறு எடுத்தவரும் இவரே.
 • டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட்  போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர். மேலும் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரர்.

விருதுகள்:

 • 1994 அர்ஜூனா விருது.
 • 1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
 • 1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
 • 1999-பத்மஸ்ரீ விருது.
 • 2008-பத்மவிபூஷன் விருது.
 • 2014- பாரத ரத்னா விருது.
 • 2010- சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here