முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-23

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-23

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்

 • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடும்  ஒரு நிகழ்வு ஆகும்.
 • பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என தீர்மானம்  நிறைவேற்றப்படது.

 • இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய ராஜ்ஜியத்தில்  உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
 • அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது.
வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்

பிறப்பு:

 • 26 ஏப்ரல் 1564 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
 • இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
 • 1623 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு காலத்தில், அவரது நினைவாக வடக்கு சுவரில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. அதில் அவரது பாதி உருவம் எழுதிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகடு அவரை நெஸ்டர், சாக்ரடீஸ், மற்றும் வர்ஜில் உடன் ஒப்பிடுகிறது.

கவிதைகள்:

 • சேக்சுபியரின் ஈரேழ்வரிப்பாக்கள்
 • வீனஸ் அன் அடோனிஸ்
 • தி ரேப் ஆஃப் லுக்ரிஸ்
 • தி பாஸனேட் பில்கிரிம்
 • தி பீனிக்ஸ் அன்ட் தி டர்டில்
 • எ லவர்’ஸ் கம்ப்ளெயின்ட

இறப்பு:

 • 23 ஏப்ரல் 1616 ல் இறந்தார்.
எஸ். ஜானகி பிறந்த தினம் 

பிறப்பு:

 • ஏப்ரல் 23, 1938 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
 • பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
 • நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
 • 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.

விருதுகள்:

 • 1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான-சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
 • 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.
 • 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது.
 • நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது.
 • 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது.
 • பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது.
 • ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது.
 • பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது.

பத்மபூஷண் விருது மறுப்பு:

 • ௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இந்திய தேசிய விருதுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here