முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-21

1

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-21

தேசிய குடிமை பணிகள் தினம்

 • தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும்.
 • ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் தேதி  இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
 • தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
 • நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
 • இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாரதிதாசன் நினைவு தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 29, 1891 ல் பிறந்தார்.

இயற்பெயர்: சுப்புரத்தினம்.

சிறப்பு:

 • சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
 • பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும்  அழைக்கப்படுபவர்.
 • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

 • “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”
 • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
  போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
 • தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.
 • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பாரதிதாசன் நூல்களில் சில:

 • அகத்தியன்விட்ட புதுக்கரடி
 • சத்திமுத்தப்புலவர்
 • இன்பக்கடல்
 • இலக்கியக் கோலங்கள்
 • உலகம் உன் உயிர்
 • ஏழைகள் சிரிக்கிறார்கள்
 • கற்கண்டு

விருது:

 • கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
 • இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
 • 1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு:

 • பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

மாக்ஸ் வெபர் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 21,1864 ல் பிறந்தார்.

முழுப்பெயர்:  மாக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்.

சிறப்பு:

 • ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சமூகவியலாளர்.
 • 1889-ல் வாழ்விடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
 • 1905-ல் இவர் எழுதிய ‘தி ப்ராடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் காபிடலிசம்’ கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது.
 • முதல் உலகப் போர் சமயத்தில் சிறிது காலம் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தார்.
 • இவர் எழுதிய எகானமி அன்ட் சொசைடியின் கையெழுத்துப் பிரதியை இவர் இறந்த பிறகு இவரது மனைவி செம்மைப்படுத்தி 1922-ல் வெளியிட்டார்.

இறப்பு:

 • 1920-ம் ஆண்டு ஜுன் மாதம் 56-வது வயதில் காலமானார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here