முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 19

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 19

சார்லஸ் ராபர்ட் டார்வின் நினைவு தினம்

பிறப்பு:

 • பிப்ரவரி 12, 1809 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
 • இவர் பரிணாமவியலின் தந்தை ஆவர்.
 • மனிதன் குரங்கின் பரிணாம வளர்ச்சி என்று விளக்கியவர்.
 • மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார்.

டார்வின் எழுதிய புத்தகங்கள்:

 • ‘பீகிள் கடற்பயணம்’ என்னும் புத்தகம் எழுதினார்.
 • தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில்  நூலாக வெளியிட்டார்.
 • தன் கண்டுபிடிப்புகளை ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை  லண்டனில்  வெளியிட்டார்.
 • டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும்.

இறப்பு:

 • சார்லஸ் டார்வின்  1882-ஏப்ரல் 19ல் காலமானார்.

பியரி கியூரி நினைவு தினம்

பிறப்பு:

 • 15 மே 1859 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • பிரெஞ்சு இயற்பியலாளர்.
 • அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர்.
 • கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும்.

விருது:

 • 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர்.
 • 1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய ஆய்வுக்காக   தாவி விருது வழங்கப்பட்டது.

கண்டுபிடிப்புகள்:

 • காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக  ‘முறுக்குத் தராசு’ (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார்.
 • பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.
 • ‘படிக மின் அழுத்தமானியை  உருவாக்கினார்.
 • காந்தப் புலங்களைப் பயன்படுத்தி வெளியேறிய துகள்களான ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்களை கண்டறிந்தார்.

இறப்பு:

 • 19 ஏப்ரல் 1906 ல் காலமானார்.

முதல் செயற்கைக் கோள்: ஆர்யபட்டா

 • 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, தனது முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை ரஷ்ய நாட்டிலிருந்து  விண்ணிற்கு செலுத்தியது.

 • அதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டது.

 • ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.இதன் எடை 360கிகி ஆகும். பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது  எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.
 • செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here