முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 16

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 16

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு பிறந்த தினம்

பிறப்பு:

  • 16 ஏப்ரல் 1848 ல் ஆந்திராவில் பிறந்தார்.

சிறப்பு:

  • தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும் தெலுங்கின் முதல் நாவலை எழுதியவர் .
  •  இந்தியாவின் முதல் விதவைத் திருமணத்தை 1887-ல் நடத்தி வைத்தார்.
  • இவர் எழுதிய “ராஜசேகரா சரித்ரா” என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.
  • ஜாதி அமைப்புகள், குழந்தைத் திருமணங்கள் முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார்.
  • கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பெண் கல்விக்காகவும் பாடுபட்டார்.
  • பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1874-ல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
  • 1876-ல் விவேகவர்தினி என்ற ஒரு தெலுங்கு பத்திரிகையைத் தொடங்கினார்.

நாடகங்கள்:

  • சமத்கார ரத்னாவளி – “காமெடீ ஆப் எர்ரர்ஸ்” என்ற ஷேக்ஸ்‌பியர் நாடகத்தின் தெலுங்கு பதிப்பு
  • காளிதாசு சாகுந்தலம் (தெலுங்கில்)
  • ரத்னாவளி – சமசுகிருத ரூபகானுவாதம்
  • தட்சிண கோக்ரஹணம்

இறப்பு:

  • வீரேசலிங்கம் 71-வது வயதில் 1919- மே மாதம் மறைந்தார்.

உலக குரல் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால்  1999ல் முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!