முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-15

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-15

லியொனார்டோ டா வின்சி  பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 15, 1452ல் பிறந்தார்.

சிறப்பு:

 • ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார்.
 • ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர்.குறிப்பாக இவரது சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர்.
 • “கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
 • இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.
 • தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்ட கனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.
 • சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15ல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது.

இறப்பு:

 • மே 2, 1519ல் இறந்தார்.

ஆபிரகாம் லிங்கன் நினைவு தினம்

பிறப்பு:

 • பிப்ரவரி 12, 1809ல் பிறந்தார்.
[Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர்.
 • அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.
 • 1834ம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
 • 1860ல் மேற்கு மாநிலங்களின் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.
 • இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
 • அதனைத் தொடர்ந்து 1865ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தினால் அடிமை முறையை ஒழித்தார்.
 • “மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி”என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும்

 நினைவகங்கள்:

 • அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது.
 • லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .

இறப்பு:

 • ஏப்ரல் 15, 1865ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here