முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 14

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம்

பிறப்பு:

  • 14 ஏப்ரல் 1891 இல் பிறந்தார்.

இயற்பெயர்:

  • பாபா சாகேப் (பொருள்: தந்தை)

சிறப்பு:

  • இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.
  • உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.
  • இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,

விருதுகள்:

  • இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

எழுதிய புத்தகங்கள்:

  • கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும்.
  • பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம்.
  • ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்.
  • யார் சூத்திரர்கள்.
  • புத்தரும் அவரின் தம்மமும்.
  • இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.

அம்பேத்கர் கருத்துக்கள்:

  • சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
  • மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது
  • கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்
  • ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்
  • கற்பி, ஓன்று சேர், புரட்சி செய்
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!