முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

 • பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 • இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்(1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.
 • “இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்” (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நோக்கம்

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

 • புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
 • குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

வ. வே. சுப்பிரமணியம்

 • வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர்) ஏப்ரல் 2 1881  அன்று பிறந்தவர்.
 • இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
 • இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

சிறப்பு

 • தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

நினைவு இல்லம்

 • தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம்எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.

இறப்பு

 • வ. வே. சு. ஐயர் சூன் 4, 1925 அன்று இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here