இனி மருத்துவ படிப்பு படிப்பதும் ஈஸி தான் – தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ள முக்கிய முடிவு!!

0
இனி மருத்துவ படிப்பு படிப்பதும் ஈஸி தான் - தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ள முக்கிய முடிவு!!
இனி மருத்துவ படிப்பு படிப்பதும் ஈஸி தான் - தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ள முக்கிய முடிவு!!
இனி மருத்துவ படிப்பு படிப்பதும் ஈஸி தான் – தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ள முக்கிய முடிவு!!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகள் ஆங்கில மொழியில் மட்டுமே பயிலும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மருத்துவ பாடங்களை கொண்டு வர இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மருத்துவ படிப்பு:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வு Objective வகையில் 200 வினாக்களுக்கு கேட்கப்படுகிறது. இதற்கான கால அளவு 3 மணி 20 நிமிடங்கள் ஆகும். மேலும் இத்தேர்வானது இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவிற்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது.

அரசு வேலைக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை – மாநில அரசு புதிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் ஒடியா ஆகிய 13 மொழிகளில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து மாநிலத்தவர்களும் இத்தேர்வை எதிர் கொள்வது எளிதாக உள்ளது. ஆனால் மருத்துவ படிப்புகளை ஆங்கில மொழியில் மட்டுமே பயிலும் நிலைமை உள்ளது. இதனால் ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதில் முதற்கட்ட நடவடிக்கையாக இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பிற மாநில மருத்துவ கவுன்சில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்திய மொழிகளை மேம்படுத்தும் வகையில் உயர் அதிகாரம் கொண்ட குழுவுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் முடிவில் மருத்துவ பாடங்களை இந்தி, தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் தயாரிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!