முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – மே 2019

0

முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – மே 2019

2019 நடப்பு நிகழ்வுகள்

இங்கு மே மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

Important Events of May Video – Click Here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மே 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

நாள்

தினம்

முக்கிய நிகழ்வுகள்

மே 01  உலக தொழிலாளர் தினம் 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராடினர்.
சர்வதேச தொழிலாளர் தினம் 2019 தீம் “அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம்: சமூக பங்குதாரர்களின் பங்கு”.
மே 4 சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் தினம் (IFFD) சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் தினம் (IFFD) மே 4ல் அனுசரிக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இவர்களை நினைவுகூறுவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் பின்பற்றப்படுகிறது.

மே 5  உலக கை சுகாதார தினம் நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரைக் காப்பது போன்றதாகும். எனவே, ஆண்டுதோறும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் எனும் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
2019 தீம் – “why infection prevention and hand hygiene are important for quality care”.
மே 7 உலக தடகள தினம் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் நூற்றாண்டு பதிப்பின் நினைவாக 1996 முதல் உலக தடகள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
மே 08 உலக செஞ்சிலுவை தினம் செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஹென்ரி டுனன்ட் (Jean Henri Dunant) என்பவரின் பிறந்த தினமான மே 8 ஆம் தேதியை சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
உலக செஞ்சிலுவை தினம் 2019 தீம் “# லவ்” ஆகும்.
மே 08 உலக தலசீமியா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8-ஆம் தேதி உலக தலசீமியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. தலசீமியா குறித்த முடிவுகளையும் கொள்கைகளையும் வடிப்போருக்கும், சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கும், நோயாளிகள் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும், ஒட்டுமொத்தமாக சமுதாயத்துக்கும் தலசீமியா பற்றிய விழிப்புணர்வை உருவாக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நோய், நடுக்கடல் பகுதி, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

2019 தீம்:Universal access to quality thalassaemia healthcare services: Building bridges with and for patients
மே 10 உலக பல்லுறுப்பு நோய் தினம் மிகக்கொடுமையான பல்லுறுப்பு நோயை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 10ம் தேதி ‘உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

நமது உடலில் தோல் மட்டுமில்லாமல் மூளை, சிறுநீரகம்,  நுரையிரல், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள், எலும்புகளையும் தாக்கும் கொடிய நோயை பல்லுறுப்பு நோய் என்கிறோம்

மே 11   உலக வலசை போதல் தினம் பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள்
2019 தீம் Protect Birds: Be the Solution to Plastic Pollution
மே 12 சர்வதேச செவிலியர்கள் தினம் பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN – International Council of Nurses) இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
2019 தீம் – ‘Nurses: A Voice to Lead, Health for All.’
மே 15  சர்வதேச குடும்ப தினம் குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி 1993ம் ஆண்டு மே 15 முதல் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
2019 தீம்: “Families and Climate Action: Focus on SDG 13..
மே 16  அமைதியாக இணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம் அமைதி, சகிப்புத்தன்மை, ஒருங்கிணைப்பு, புரிதல், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை தொடர்ந்து அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக ஐ.நா. அமைப்பு மே 16-ஐ அமைதியாக இணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
மே 16  சர்வதேச ஒளி தினம் முதன் முதலில் வெற்றிகரமாக லேசர் கற்றையை 1960 மே 16 இயக்கிக்காட்டிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியடோர் மைமான் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒளி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் விஞ்ஞான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் சமாதானம், நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கான அதன் திறனைப் பெறுவதற்கான அழைப்பு ஆகும்..
மே 17   உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் 1934ஆம் ஆண்டில் உலக தந்தி சங்கம்,  உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம். இது 1969 முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
2019 தீம்: Bridging the standardization gap.
மே 17  உலக உயர் இரத்த அழுத்த  தினம் உலக சுகாதார நிறுவனம் [WHO] உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2019 தீம்: Know Your Numbers
மே 17   ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம் ஹோமோபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினத்தின் நிறுவனர்கள், இந்த தினத்தை ஊக்குவிக்க மற்றும் மே 17 ம் தேதியை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக IDAHO கமிட்டியை நிறுவினார்கள்.

ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினத்தை நிறுவியவர் லூயிஸ்-ஜார்ஜஸ் டின் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தீம்: உலக பார்வை – அனைவருக்கும் நீதி மற்றும் பாதுகாப்பு [Global Focus – Justice and Protection for All]
மே 18 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் [எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினமாகவும் அறியப்படும்], ஆண்டுதோறும் மே 18 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மே 18, 1997 இல் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டன் மார்கன் மாநில பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் தொடர்பான கருத்து வேரூன்றியது.

1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி கிளிண்டன் நிகழ்த்திய உரையை நினைவுகூறுவதற்காக முதல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்பட்டது, இன்று வரை இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.

மே 18 சர்வதேச அருங்காட்சியக தினம் 1977 முதல் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அருங்காட்சியக சமுதாயத்திற்கான தனிப்பட்ட தருணத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் சர்வதேச அருங்காட்சியக தினத்தை ICOM ஏற்பாடு செய்துள்ளது.
2019 தீம் “Museums as Cultural Hubs: The future of tradition”
மே 20 உலக தேனீ தினம் உலக தேனீ தினம் ஆண்டுதோறும் மே 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் வாழ்ந்த நவீன தேனீ வளர்ப்பு நுட்பங்களின் முன்னோடி அன்டன் ஜான்ஸாவின் கடின உழைப்பினை நினைவுகூறும் வகையில் அனுசரிக்கபடுகிறது.

மே 20,2017ல் ஸ்லோவேனியாவின் முன்மொழிவை ஏற்று ஐ .நா. 2018 ஆம் ஆண்டிலிருந்து உலக தேனீ தினமாக அனுசரிக்கிறது.

மே 21  உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம் 2001 ஆம் ஆண்டு யுனெஸ்கோ, கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய உலக அளவிலான பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. அதன்படி டிசம்பர் 2002 இல் ஐ.நா. பொதுச் சபை அதன் தீர்மானம் 57/249 இல் உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக மே 21ம் தேதியை அறிவித்தது.
மே 22  உயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச நாள் ஐக்கிய நாடுகள் சபை மே 22 அன்று பல்வேறு பல்லுயிரிய விவகாரங்களை புரிந்துகொள்ள மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச தினத்தை  (IDB)  அறிவித்துள்ளது.
2019 தீம் – Our Biodiversity, Our Food, Our Health
மே 23 மகப்பேறியல் ஃபிஸ்துலா’வுக்கு முடிவுகாணும் சர்வதேச தினம் மகப்பேறியல் ஃபிஸ்துலா’வுக்கு முடிவுகாணும் சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) சபையால் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் வளரும் நாடுகளில் பல பெண்களை பாதிக்கும் மகப்பேறியல் ஃபிஸ்துலாவுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கிறது.
மே 25 உலக தைராய்டு நாள் ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக், ETA மாநாட்டிற்கு முன்னதாக 2007 செப்டம்பரில், தைராய்டு ஃபெடரேஷன் சர்வதேச உறுப்பினர்கள் “உலக தைராய்டு தினத்தை” உருவாக்க முடிவு செய்தனர். ஸ்காண்டிநேவிய நாடுகளில் தேசிய தைராய்டு விழிப்புணர்வு நாள் ஏற்கனவே கொண்டாடப்படுகிறது. முதல் உலக தைராய்டு நாள் 2008 மே 25 இல் இருந்து கொண்டாடப்படுகிறது.
மே 25 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் 25 மே மாதம் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நிகழ்வு ஆகும். குழந்தைகளின் கடத்தல்களின் பிரச்சினையில் கவனத்தைத் திசைதிருப்பவும் மேலும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்காக பெற்றோருக்குக் கல்வி கற்பிக்கும் நோக்கத்தோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மே 28 உலக பசி தினம் பசி திட்டம் என்னும் நிறுவனம் உலக பசி தினம் என்று அழைக்கப்படும் ஒரு முயற்சியைத் துவங்கியது. மே 28 அன்று இது அனுசரிக்கப்படுகிறது.பசி திட்டம் என்னும் நிறுவனம் உலக பசிக்கு ஒரு பன்முக தீர்வை கண்டறியும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவருவதன் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மே 28 சர்வதேச அம்னெஸ்டி தினம் மே 28 அன்று சர்வதேச அம்னெஸ்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் மே 28 அன்று இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மனித உரிமைகள் மீறல்கள் தடுக்க, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், அதன் உரிமைகள் மீறப்பட்டுள்ளவர்களுக்கான நீதிக்காக போராடுவதற்கும் மற்றும் சர்வதேச சட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும்.

மே 28 வி.டி சாவர்க்கர் பிறந்த நாள் சுதந்திரவீர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாள் மே 28 அன்று கொண்டாடப்படுகிறது.  இவர் 1883 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா நாசிக்கில் பிறந்தார் மற்றும் வீர் சாவர்க்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுவார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய ஒரு புரட்சியாளராவார்.
மே 29 சர்வதேச அமைதி காப்போர் தினம் 2001ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும்,சமாதானத்திற்கான இந்த நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை  ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ம் தேதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது.
மே 29 உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தினம் (WDHD) ஒவ்வொரு மே 29 அம தேதி அன்று உலக இரைப்பை குடலியல் அமைப்பு (WGO) மற்றும் WGO அறக்கட்டளை (WGOF) உடன் இணைந்து உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தினத்தை (WDHD) கொண்டாடுகிறது மேலும் 110 க்கும் மேற்பட்ட WGO உறுப்பினர்கள் மூலம் இந்த பிரச்சாரத்தை உலகளாவிய, பொது சுகாதாரப் பிரச்சாரமாக உருவாக்குகிறது.
மே 30 உலக பல ஸ்களீரோசிஸ் நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 30 அன்று உலக பல ஸ்களீரோசிஸ் நாள் உத்தியோகபூர்வமாக குறிக்கப்படுகிறது. 2019 பிரச்சாரம் ‘என் கண்ணுக்கு தெரியாத எம்எஸ்’ (#MyInvisibleMS) மற்றும் தீம் தெரிவுநிலை (visibility) ஆகும்.2009 ஆம் ஆண்டில் MS சர்வதேச கூட்டமைப்பு (MSIF) மற்றும் அதன் உறுப்பினர்கள் முதல் உலக பல ஸ்களீரோசிஸ் தினத்தை தொடங்கினர்.
மே 31 உலக புகையிலை தினம் உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.

உலக புகையிலை தினம் 2019 “புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரத்தில் இந்த ஆண்டு கவனம் செலுத்தவுள்ளது.

Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!