முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜூலை 2018

0

முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018 

இங்கு ஜூலை மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

முக்கியமான நாட்கள் ஜூலை 2018 PDF பதிவிறக்கம் செய்ய

நாள்தினம்முக்கிய குறிப்புகள்
ஜூலை 1தேசிய மருத்துவர்கள் தினம்மருத்துவ உலகுக்கு சிறப்பு புரிந்த டாக்டர் பி.சி.ராய் நினைவாக அவரின் பிறந்தநாள் தான் டாக்டர்கள் நாள் ஆக கொண்டாடப்படுகிறது
ஜூலை 1முதலாவது ஜி.எஸ்.டி. தினம்முதலாவது ஜி.எஸ்.டி. தினத்தை அரசு கொண்டாடியது; இந்திய வரிவிதிப்பு முறையில் வரலாறு காணாத சீர்திருத்த நடவடிக்கையின் முதலாம் ஆண்டுதின நிகழ்வில் நிதியமைச்சர், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்
ஜூலை 2உலக யுஎஃப்ஒ (அடையாளங்காண முடியா பறக்கும் பொருள்) தினம்உலக யுஎஃப்ஒ தினம் அடையாளங்காண முடியா பறக்கும் பொருள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முதலில் 2001 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது, இது உலக யுஎஃப்ஒ தின அமைப்பால் உருவாக்கப்பட்டது.உலக யுஎஃப்ஒ தின அமைப்பு அதிகாரபூர்வமாக ஜூலை 2 ம் தேதியை உலக யுஎஃப்ஒ தினமாக அறிவித்துள்ளது
ஜூலை 2உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் 1994 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு பிரஸ் அசோசியேஷன் (AIPS) ஆல் அதன் 70 வது ஆண்டு விழாவில் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் உருவாக்கப்பட்டது
ஜூலை 11உலக மக்கள்தொகை தினம்உலக மக்கள்தொகை தினம், ஜூலை 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு இந்நாள் முன்னெடுக்கப்பட்டது. 2018-ன் கருத்து வாசகம்: “குடும்பக் கட்டுப்பாடு ஒரு மனித உரிமை”
ஜூலை 12சர்வதேச மலாலா தினம்ஒவ்வொரு ஜூலை 12ம் தேதியும் “மலாலா தினம்” என்று அழைக்கப்படும் ஐ.நா. அனுசரிப்பு ஆகும்.இந்த நாள் பெண்கள் கல்வி சமமாக அணுக வேண்டும் என்று வாதிட்ட பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்ஸாயின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது
ஜூலை 14பிரஞ்சு தேசிய நாள்பிரான்ஸ் நாட்டில் Bastille Day என்பது அந்நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் நாள் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. 1790ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஸ்டில் சிறையுடைப்பு நிகழ்வானது பிரெஞ்சு தேசத்தின் ஓர் எழுச்சியாக கருதப்பட்டது.
ஜூலை 16உலக பாம்பு தினம்உலகத்தில் பாம்புகள் பற்றிய மக்களின் அச்சங்களையும், பிரமைகளையும் நீக்கவே ஜூலை 16 ம் தேதி உலக பாம்பு தினம் அனுசரிக்கப்பட்டது
ஜூலை 18சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18 2018 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா (18 ஜூலை 1918) பிறந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு முதல் ஐ.நா. மண்டேலா தினம் ஜூலை 18, 2010 அன்று அனுசரிக்கப்பட்டது
ஜூலை 26கார்கில் விஜய் திவாஸ்கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்
ஜூலை 28உலக இயற்கை பாதுகாப்பு தினம்இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உலக இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. காடழிப்பு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், மாசுபாடு, பிளாஸ்டிக், இரசாயனங்கள், போன்ற பல இயற்கையின் அச்சுறுத்தல்கள் உள்ளன
ஜூலை 28உலக ஹெபடைடிஸ் நாள்நோபல் பரிசு பெற்ற பாருச் சாமுவேல் ப்ளம்பெர்க் பிறந்த நாள் ஜூலை 28 ஆம் தேதி[ஹெபடைடிஸ் பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது] பொது மக்களிடையே ஹெபடைடிஸ் வைரஸ்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஹெபடைடிஸ் தினமாக அறிவிக்கப்பட்டது
ஜூலை 29சர்வதேச புலி தினம்2010 ஆம் ஆண்டு புனித பீட்டர்ஸ்பர்க் புலிகளின் உச்சி மாநாடு உருவாக்கப்பட்டது முதல் சர்வதேச புலி தினம் , புலி பாதுகாப்புப் படையினரின் முக்கிய வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது

For English – July Important days PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!