முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – நவம்பர் 2018

1

முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தேதிதினம்விவரங்கள்
நவம்பர் 5 உலக சுனாமி விழிப்புணர்வு தினம்  2015 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக நவம்பர் 5ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை பரிந்துரைத்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் AMCDRR (பேரழிவு ஆபத்து குறைப்புக்கான ஆசிய அமைச்சக மாநாட்டில்) பேரழிவு ஆபத்து குறைப்பு (DRR) உடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் கொண்டாடப்படுகிறது.
  நவம்பர் 10சர்வதேச   கணக்கியல்   தினம்நவம்பர் 10 அன்று சர்வதேச கணக்கியல் தினம் கொண்டாடப்படுகிறது. 1494 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி இரட்டை நுழைவு புத்தகத்தைப் பற்றி முதல் புத்தகத்தை வெளியிட்ட, இத்தாலிய கணிதவியலாளர் லூகா பாசியோலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சர்வதேச கணக்கியல் தினம் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
நவம்பர்   10 அமைதி   மற்றும்   மேம்பாட்டுக்கான   உலக   அறிவியல்தினம்அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் 10 நவம்பர் அன்று கொண்டாடப்படுகிறது. இது சமுதாயத்தில் விஞ்ஞானத்தின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வளர்ந்துவரும் விஞ்ஞான விவாதங்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் காட்டுகிறது. இது நம் அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.    2018   தீம்: “Science, a Human Right”
நவம்பர்   13   உலக   கருணை   தினம்நவம்பர் 13 அன்று உலக கருணை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக கருணை தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு உலக கருணை இயக்கத்தால் தொடங்கப்பட்டது, இது 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கருணை அமைப்புக்களின் டோக்கியோ மாநாட்டில் உருவானது ஆகும்.
விஜிலென்ஸ்   விழிப்புணர்வு   வாரம்அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரைநிறுவனத்தில் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படை மதிப்புகளை பராமரிப்பது பற்றிய ‘விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்’ அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தால் அனுசரிக்கப்பட்டது.
நவம்பர் 14உலக நீரிழிவு தினம்இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.உலக நீரிழிவு தினத்திற்கான தீம் 2018-19 Family and Diabetes.
நவம்பர்   14  குழந்தைகள்   தினம்இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர் நேரு. அதனால் அவரை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என அழைத்தனர். இதனால் அவரின் நினைவாகவும், அவரின் விருப்பத்தின் பெயரில் அவரின் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் தினம் என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுகிறது.
நவம்பர்   15 உலக   தத்துவ   தினம்ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3 வது வியாழக்கிழமையை உலக தத்துவ தினமாக கொண்டாட யுனெஸ்கோ தீர்மானம் கொண்டுவந்தது. இது 21 நவம்பர் 2002 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. யுனெஸ்கோ சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சிந்தனையின் வளர்ச்சிக்கு தத்துவத்தின் நீடித்த மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்ட இந்த தினத்தை கொண்டாடுகிறது.
நவம்பர்   16 சகிப்புத்தன்மைக்கான   சர்வதேச   தினம்கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது.இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.
நவம்பர்   16  தேசிய   பத்திரிகை   தினம்உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையுடன் எடுத் துரைத்து, அவர்கள் அறிவுக் கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப் படுகிறது.இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் பணியினை கவுரவிக்கும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பத்திரிகை கவுன்சில்1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
நவம்பர்   18  முதல் இயற்கை மருத்துவ [நேச்சுரோபதி] தினம்ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் அதன் முதல் இயற்கை மருத்துவ [நேச்சுரோபதி] தினத்தை கொண்டாடுகிறது.யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளூர் முகாமைத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து சுகாதார முகாம்கள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது.
நவம்பர்   18 சாலை   போக்குவரத்தால்   பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு   தினம்சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு தினம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாலை போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சரியான அங்கீகாரமாக நடைபெறுகிறது. இது 1993 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சாலையின் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு, சாலை அமைதி எனத்தொடங்கியது, அதற்குப்பின் 2005ல் ஐ.நா. பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.2018   தீம்:   “Roads have Stories”  
நவம்பர்   19 உலக   கழிப்பறை   தினம்உலக கழிவறை அமைப்பின் மூலம் உலக சுகாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்க உலகளாவிய கழிப்பறை தினம் (WTD) நவம்பர் 19 ம் தேதி நிறுவப்பட்டது . பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.நா. பொதுச் சபை உலக கழிப்பறை தினத்தை 2013 ல் உத்தியோகபூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.2018   தீம்:   When Nature Calls
நவம்பர்   20 உலகளாவிய குழந்தைகள் தினம்ஐக்கிய நாடுகளின் உலகளாவிய குழந்தைகள் தினம் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20 அன்று சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்த, குழந்தைகளின் நலன் மேம்பட கொண்டாடுகிறது.2018 தீம்: Children are taking over and turning the world blue
நவம்பர்   21 உலக   தொலைக்காட்சி   தினம்முதல் உலக தொலைக்காட்சி மன்றம் 1996 இல் நடைபெற்றதன் நினைவாக 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நவம்பர் 21 ம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.  
நவம்பர்   21  உலக   மீன்பிடி   தினம்உலக மீன்பிடி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி உலகெங்கிலும் மீனவர்களின் சமூகங்கள் மீன்பிடி மற்றும் ஆரோக்கியமான கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நிலையான பங்குகளை உறுதிப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
நவம்பர்   23குரு   நானக்   ஜெயந்திகுரு நானக் ஜெயந்தி அல்லது குர்புராப் நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் மத சடங்குகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவின் பிறந்த நாளை இந்த நாள் குறிக்கிறது. இந்த ஆண்டு குரு நானக் தேவின் 549 வது பிறந்த நாளை குறிக்கிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குரு நானக் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர்   25பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 25 ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது.உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, சமுதாய வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளனர், அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.2018 தீம் – “Orange the World: #HearMeToo”
நவம்பர்   26அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்இந்தியாவின் அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக, உச்சநீதிமன்றம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 26, 2018 நடைபெற்ற அரசியல் சட்ட தின விழாவை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
நவம்பர்   26தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA)14 வது துவக்கதினம்தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA) 14 வது துவக்க தினத்தை மத்திய மாநில உள்துறை அமைச்சர் ஸ்ரீ கிரண் ரிஜிஜு துவக்கி வைப்பார்.2018   தீம்   –   “Early Warning for Disasters”.  
நவம்பர்   29  ஐக்கிய அரபு நாடு நினைவு தினம்குடிமக்கள், இராணுவம் மற்றும் மனிதாபிமான சேவை ஆகியவற்றில் தங்கள் உயிர்களை வழங்கிய எமிரேட் தியாகிகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அங்கீகாரத்திற்காக நவம்பர் மாதம் 29ம் தேதி ஐக்கிய நாடு முழுவதும் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Qaumi Ekta Week  தேசிய   ஒருமைப்பாடு   வாரம்சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் துடிப்பான பெருமை, ஒருங்கிணைந்த கலாச்சாரம் மற்றும் தேசியத்துவத்தைப் போற்றி வலியுறுத்தும் வகையில், தேசிய ஒருமைப்பாட்டு வாரம் (“Qaumi Ekta Week), நாடு முழுவதும் நாளை தொடங்கி, 2018, நவம்பர் 25 வரை கொண்டாடப்பட உள்ளது.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர –கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here