முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 7

0

மே 7 நடப்பு நிகழ்வுகள்

மே 7 – இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம்

  • பொலிவுரு நகரங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது உச்சி மாநாடு போபாலில் மே 8,2018 நடைபெற இருக்கிறது
  • மேற்கு வங்காளம் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில்  வரும் மே 25-ம் தேதி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர்  பங்கேற்க உள்ளனர்.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் திட்ட ஒப்புதல் வாரிய சந்திப்பின் போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் – ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 10 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும்
  • தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக உலக வங்கியிடம் 200 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்து.
  • 2022ம் ஆண்டுக்குள் 0-6 வயது வரையிலான குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்தின்மையை 4% இருந்து 25% குறைக்க இந்தக் கடன் அரசுக்கு உதவும்.
  • ரஷியாவின் அதிபராக நான்காவது முறை 07.05.2018ல் பதவியேற்று கொண்ட விளாடிமிர் புதின்.
  • ரஷியாவின் துணை பிரதமராக நிதி மந்திரி அன்ட்டன் சிலுவனாவ்  நியமனம்.
  • பிரதமர் – டிமிட்ரி மெட்வடேவ்
  • இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து வீடுகளுக்கு டீசல் வழங்கும் திட்டத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) தொடங்கி இருக்கிறது.
  • அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா குழுவினர் முதன் முறையாக ரோபோ மூலம் தண்டுவட ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
  • இஸ்தான்புல் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீரர் டாரோ டேனியல் வெற்றி பெற்று முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!