முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 3 2018

0

மே 3, 2018 ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்

மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்

2018 தீம் – “Keeping Power in Check: Media, justice and the Rule of Law”

  • உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
  • படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம்’ (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இத்தாலியுடன் இந்தியாவிற்கு கலாச்சாரத் தொடர்பு உருவாகி 70 வருடங்கள் முடிந்துள்ளன.
  • இதை நினைவுகூரும் வகையில் டெல்லியின் இத்தாலி தூதரகத்தில் பிரபல ஓவியர் .பி.ஸ்ரீதர் வரைந்த ஓவிய கண்காட்சியை மத்திய அரசின் இந்திய கலாச்சாரத் தொடர்பு கவுன்சில் (ஐசிசிஆர்) மற்றும் இத்தாலி தூதரகத்தின் கலாச்சார மையம் ஆகியவை இணைந்து நடத்தின.
  • பிரதமரின் மருத்துவப் பாதுகாப்பு திட்டம் 2020 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதில் 6 மருத்துவமனைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு விட்டன. இதுதவிர 73 மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
  • ஓய்வூதியதாரர்கள் உமாங் செயலி மூலம் “ஓய்வூதிய கணக்கு புத்தகத்தைக் காட்டுக” எனும் சேவையை ஈ.பி.எஃப்.ஓ. அறிமுகம் செய்துள்ளது.
  • “பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 244 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக தேசிய மாநாட்டை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் நாளை (2018, மே 4) நடத்துகிறது.
  • நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ளது தும்லிங்டார் பகுதி. இங்குள்ள காண்ட்பரி 9 என்ற இடத்தில் இந்திய அரசின் உதவியுடன் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்டம் செயல்பட உள்ளது.
  • நேபாள பிரதமர் – சர்மா ஒலி
  • பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
  • மோடி, ஜின்பிங் பேச்சைத் தொடர்ந்து இந்திய சீன ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றத்துக்காக நேரடி தொலைபேசி (ஹாட்லைன்) சேவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு எகிப்து தலைநகரான கெய்ரோவில் 5 நாள் கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது.
  • இவர் 1913ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர்.
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) தலைவராக சுபாஷ் சந்திர குந்த்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
  • எல்ஐசி தலைவர் – வி.கே.சர்மா
  • நியு இந்தியா அஸ்யூரன்ஸ் தலைவர் – ஜி.ஸ்ரீனிவாசன்
  • 2022-ம் ஆண்டுக்குள் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 5ஜி பிராட்பேண்ட் சேவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த வரைவின் நோக்கமாக உள்ளது.
  • மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப்பின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 78% உயர்ந்து ரூ.967.40 கோடியாக உயர்ந்திருக்கிறது.
  • இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான பிரனோய் முதன்முறையாக உலகத் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • மற்றொரு முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி 5வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 5 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
  • முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!