முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 08, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 08, 2018

  • ‘Defence Expo 2018’  சர்வதேச பாதுகாப்புத் துறை கண்காட்சி முதல் முறையாக “சென்னையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. உலக நாடுகளுக்கு முப்படைகளின் பலத்தை நிரூபிக்கும் வகையில் கப்பல்கள், ராணுவத் தளவாடங்கள் போர் விமானங்கள் என பலவும் இந்தக் கண்காடசியில் காட்சிப்டுத்தப்படும்.
  • Theme : “India The Emerging Defence Manufacturing Hub”
  • யூடியூப்(Youtube) பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்திருக்கிறது.
  • மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10m Airpistol பிரிவில் இந்தியாவின் Om Prakash Mitharwal மற்றும் மனுபாக்கெர் ஜோடி தங்கம் வென்றுள்ளது.
  • மார்ஷல் தீவுகள் தனது சொந்த குறியாக்கத் தினை Cryptocurreny யை வெளியிட்டது. இது அமெரிக்க டொலடுமன் சட்ட ரீதியான ஒப்பந்தக்காரராக விநியோகக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மார்ஷல் தீவுகளில் Cryptocurrency name SOV.
  • உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலம் வென்று சாதனை படைத்த அருண புத்தரெட்டிக்கு தெலுங்கான அரசு 2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
  • ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற தால் நினைவு சர்வதேச ரேபிட் செஸ் போட்டி (Tal Memorial Rapid Trophy) யில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேலின் வீரர் போரிஸ் ஜெல்பான்டை வீழ்டத்தி சாம்பியன்பட்டம் வென்றார்.
  • கர்நாடக மாநில மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அம்மாநில முதல்வர் “ஆரோக்கிய கர்நாடகா” எனும் புதிய திட்டத்தை 1.43 கோடி குடும்பங்கள் பயன்பெறும் நோக்கில் தொடங்கியுள்ளார்.
  • இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்து விட்டதாக “யுனிசெஃப்” (UNICEF) தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் குழந்தை திருமண விகிதம் 47 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 27 சதவீதமாக குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் சவூதி அரேபியாவை முந்தி “ஈராக்” முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஆந்திர மாநில அரசுக்கு பாமுலேறு பகுதியில் வசிக்கும் பழங்குடியினரால் விளைவிக்கப்படும் “அரக்கு காப்பி” (Araku Coffee) விரைவில் புவி சார் குறியீடு பெற உள்ளது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!