முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 04, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 04, 2018

  • இந்தியாவிலேயே 2 வது பசுமை சாலை திட்டத்திற்கான மாநிலம் தமிழ்நாடு ஆகும். 1வது மும்பை – புனே வரை அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு ISRO வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • தமிழகத்தில் சித்த மருத்துவ கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
    “ரிவேரா 18” என்ற சர்வதேச கலை விளையாட்டு விழா விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ‘India  2018’ எனும் புத்தகத்தை ஆங்கிலத்திலும்இ “Bharat 2018” என்று ஹிந்தியிலும் வெளியிட்டார்.
  • 2018 உலக ஜீனியர் ஸ்வாஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது.
    மதுரை ஊரகக் காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறிய “காப்ஸ் ஐ” செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • உலக வனவிலங்கு தினம் (World Wild Life Day) மார்ச் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்துரு :
  • ‘Big Cats Predators Under Threat’
  • சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் கௌர் தங்கம் வென்றார்.
  • “பண்டி கூட் (Bandi Coot)” இந்தியாவின் முதல் மனித கழிவை அகற்றும் Robo கேரளாவில் அறிமுகம்.
  • மத்திய அரசின் மின்சார பகிர்வு திட்டமான உதய் திட்டத்தில் புதியதாக இணைந்துள்ள யூனியன் பிரதேசம் இலட்சத்தீவு.
  • இந்தியா – வியட்நாம் இடையே அணு ஆயுதம், விவசாயம், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (NFRA – National Finanical Reporting Authority) அமைப்பதற்கான முன் மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!