முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 19, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 19, 2018

  • உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index) இந்தியாவின் நிலையை உயர்த்தவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் “புதிய கண்டுபிடிப்புகளுக்கான தனிப் பிரிவு” (Innovation Cell) ஒன்றை அமைக்க உள்ளதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
  • தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசிய வேளாண் நிறுவனம் விவசாயிகளுக்காக உருவாக்கிய “காஞ்சி” (KANCHI) என்னும் பணமில்லா மின்னணு மென்பொருளை ஆளுநர் மாளிகையில் துவக்கி வைத்துள்ளார். காஞ்சி மென்பொருள் உழவர்களை வங்கிகளுடனும், சந்தைகளுடன் இணைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். KANCHI – Kisan Advancement Through Cashless Innovation.
  • சீனாவில் நடைபெறும் ஆசிய கிராஸ்கன்டரி பந்தயத்தில் (Asian Cross Country race Championships) மகளிருக்கான 8Km போட்டியில் இந்தியாவின் “சஞ்ஜீவனி ஜாதவ்” வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
  • ஹரியானா மாநிலம் ஹிசாரில் (Hisar) உள்ள மத்திய எருமை ஆராய்ச்சி நிறுவனம் (CIRB) இந்தியாவின் முதல் அசாம் இன எருமையினை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘Sach – Gaurav’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • சங்கீதா பெஹதூர் பெலாரஸ் நாட்டுக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற IFT டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் “அன்கிதா ரெய்னா” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • 4 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரை “சென்னையின் FC ” (Chennaiyen FC ) வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் பெங்களுரு FC அணியை எதிர் கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • கர்நாடக வங்கி (Karanataka bank) தனது முழுவதும் பெண்களால் நிர்வகிக்கும் வங்கிக் கிளையை ‘பெங்களுருரில்’ தொடங்கியுள்ளது.
  • பலாப்பழத்தை (Jack Fruit) தனது மாநில பழமாக வருகின்ற 21 ம் தேதி அறிவிக்கப்போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவின் மாநில விலங்கு யானை, பறவை கிரேட் கார்ன்பில், மலர் கன்னிகோனா, மரம் தென்னை மற்றும் மீன் கரிமீன் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஸ்ரீ பெரும்புதூரில் அமைய உள்ள வானூர்தி தொழில் பூங்காவில் ரூ. 180 கோடி செலவில் “புதிய உயர்கணினி, வடிவமைப்புத் திட்ட மையம்” தொடங்கப்படும் என தமிழகத் தொழில் துறை அமைச்சர் M.C. சம்பத் தெரிவித்துள்ளார்.

PDF Download

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here