முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 16, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 16, 2018

 • ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் முக்கிய மந்திரி மகிளா கோஷ் திட்டத்தினை மத்தியபிரதேச மாநிலம் துவாக்கியுள்ளது.
 • ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கத்ரின் ஜேக்கப்ஸ் டோடிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • மனிதர்களின் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் வைரஸ் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான பன்றிகளை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
 • இன்னும் 5 ஆண்டுகளில் பள்ளிகளில் உள்ள போர்டுகள் எல்லாம் டிஜிட்டல் போர்டுகளாக மாறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற (Free Ride World Tour) சப்பரிரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டியில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டர்டல் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
 • உத்திரபிரதேசத்தில் “சோலார்” எனப்படும், மிகப் பெரிய சூரிய ஒளிமின் ஆலையை பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராணும்ää நேற்று துவக்கிவைத்தனர். 75mm மின் திறனுள்ள இந்த ஆலை 500 கோடி ரூபாய் செலவில் பிரான்சின்ää என்கி’ என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 380 ஏக்கர் நிலத்தில் 1.18 லட்சம் சோலார் பேனல்களுடன், இந்த ஆலை நிறுவப்பட்டு உள்ளது.
 • திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலைக்கு நீர்ப் பிடிப்பு அபிவிருத்தித் திட்டத்தின் சிறந்த செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது.
 • நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • இந்தியாவின் முதல் கடலோர காவற்படை பயிற்சிக்கான தேசிய அகாடமி (National Academy of Coastal Policing) ‘குஜராத்’ மாநிலத்தில் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • 105 வது இந்திய அறிவியல் மாநாடு “மணிப்பூர்” மாநிலம் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் “மார்ச் 16 முதல் 20 வரை நடைபெற்றது”.
 • Theme : Reaching The unreached Through Science & Technology
 • இந்தியாவின் மிக உயரமான மூவர்கக் கொடி கர்நாடாகவின் மாநிலம் பெலகாவில் (Belagavi) பறக்க விடப்பட்டது.
 • “World Ocean Summit – 2018” உலக கடல் மாநாடு “மெக்சிகோவில் ரிவேரியா மாயா” நகரில் நடைபெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here