முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 25 2018

0
  • உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
  • பிரதமர் நரேந்திர மோடி 25.04.2018 அன்று மறைந்த முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் நினைவுத் தபால்தலை வெளியிட்டுள்ளார்.
  • நாட்டிலேயே 100 சதவீதம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டமாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உருவாகி இருக்கிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2018-19 பருவத்தில் மூல சணலிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஹரிமாவோ சக்தி என்ற பெயரில் இந்தியா – மலேசியா இடையிலான ராணுவ கூட்டு போர் பயிற்சி நடைபெறவுள்ளது.
  • தரையிறக்கும் கப்பல் வசதி (எல்சியு) எம்கே-IV திட்டத்தின் 3-வது கப்பல் 25.04.2018 போர்ட்பிளேர் துறைமுகத்தில் இந்தியக் கப்பல் படையில் ஜ.என்.எஸ்சி.யு எல்53 சேர்க்கப்பட்டது.
  • கடலோர காவல் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த மற்றும் மதிப்பீடு செய்ய கேரளாவில் இரண்டு நாட்கள் கடலோரப் பாதுகாப்பு பயிற்சி ‘சாகர் கவாக்‘ நடத்தப்பட்டது.
  • பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் மற்றும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்தில் இருந்து 2018 மே மாதம் விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்த ஜிசாட்-11-ன் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • சீனாவில் 15 சென்டிமீட்டர் சிறகளவில் விஞ்ஞானிகள் ஒரு பெரிய கொசுவை கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.
  • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் ஹாம்ஸ்டட் நகரில் நடைபெறவுள்ளது.
  • எகிப்திய புகைப்பட பத்திரிகையாளர் மஹ்மூத் அபு ஜீத்க்கு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 2018 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரப் பரிசு வழங்கப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!