முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 01, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 01, 2018

மே 1 – சர்வதேச தொழிலாளர் தினம்

மே 1 – மகாராஷ்டிர & குஜராத் மாநில தினம்

மே 1 – உலக ஆஸ்துமா தினம்

  • ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 88-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று நடைபெற்றது.
  • 1930 ஏப்ரல் 30-ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ராஜாஜி தலைமையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டம் பாருலேசிபி என்னும் இடத்தில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட உள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத் துணை முதல்வராகிறார் சபாநாயகர் கவீந்தர் குப்தா.
  • 2018 ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது.
  • அடிப்படை மற்றும் செயல்முறை அறிவியல், மனிதநேயம், கலை, சமூக அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான துறைகளில் ஆராய்ச்சிக்கான வருகையாளர் விருதுகளை குடியரசுத்தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் 02.05.2018 வழங்குகிறார்.
  • செர்பிய குடியரசு நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத் துறை மந்திரியுமான இவிகா டேசிக் இந்தியாவில் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
  • இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்அயான் கபாடியா என்ற 9 வயது மும்பை சிறுவன் சாதனை
  • புதுதில்லியில் 05.2018 நடைபெற்ற இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தைத் தொடர்பான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பான, எளிதில் அணுகக் கூடிய எரிசக்தி வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டின் ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு மே 9-ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இஸ்லாமாபாத்தில் அதிநவீன சர்வதேச விமான நிலையம் ஒய் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையம் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்களில் மிகப்பெரியதாக இருக்கும்.
  • அமெரிக்காவுக்கான இந்தியாவின் இன்ஜினீயரிங் ஏற்றுமதி 2017-18-ம் நிதி ஆண்டில் 17 சதவீதம் அதிகரித்து 7,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தில் இன்ஜினீயரிங் ஏற்றுமதியின் பங்களிப்பு 25 சதவீத அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளரானார் ஹரேந்திர சிங்; மகளிர் அணியின் பயிற்சியாளராக மரிஜென் மறுநியமனம்.
  • கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் எகிப்து நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா.
  • ஐசிசி கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசைஇந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம்.
  • உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி
  • சிதான்ஷு ரஞ்சன் கர் – பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர்

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!