முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 27 2018

0
  • ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு உலக கிராபிக்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.உலக கிராபிக்ஸ் தினம் – உலக கிராபிக் டிசைன் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 3 ஆண்டுகளாக தமிழகத்துக்கு முதலிடம்
  • மத்தியப் பழங்குடியினர் நலன் அமைச்சகமும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையமும் இணைந்து மேற்கொள்ளும் வனதன் திட்டத்தைப் பிரதம மந்திரி சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூரில் தொடங்கிவைத்தார்.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அணைத்து ஆளில்லா கடவுப் பாதைகளும் அகற்றப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வினி லோஹானி கூறியுள்ளார்.
  • என்.எஸ்.சி.ஐ. பாதுகாப்பு விருதுகள் 2017 – சர்வ சிரேஷ்டா சுரக்ஷா புரஸ்கார், சிரேஷ்ட சுரக்ஷா புரஸ்கார், சுரக்ஷா புரஸ்கார் மற்றும் பிரசான்ஷா பத்ரா என நான்கு பிரிவுகளில் மொத்தம் 70 நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடக்கிறது.
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் 2017-18-ம் ஆண்டில் அரசுக்கு ரூ. 7.41 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!