முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26 2018

0

ஏப்ரல் 26: அறிவுசார் சொத்துரிமை தினம்

  • சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • நிலநடுக்கம் ஏற்பட்டால், அதைச் சமாளிப்பது குறித்த பரிசோதனை ஒத்திகை ஒன்றுபேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகம்  சார்பில் நடத்தப்பட்டது. திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பரிசோதனை 26.04.2018 அன்று நடத்தப்பட்டது.
  • இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர்.
  • உள்நாட்டு கண்டுபிடிப்பு, உற்பத்தி உள்ளடக்கிய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் சுமார் ரூ.825 கோடி கடன் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்திய தர நிர்ணய அமைவனம் குஜராத் ஆல்கலிஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு திரவ குளோரின் உற்பத்திக்காக அகில இந்திய அளவில் உரிமம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ராணுவ மருத்துவப் படையின் மூத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிபின் பூரி பதவி ஏற்றார்
  • உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
  • நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ‘வாஸ்ப்-104 பி’ ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • முதல் முறையாக இந்தியாவில் மாதாந்திர ஊதியப் பட்டியல் விவரம் வெளியிடப்படுகிறது.
  • திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா ஹம்ரோ சிக்கிம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார்.
  • இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஏணி மீது அமர்ந்தபடி 10 மணி நேரத்திற்கு மேலாக மோட்டார் சைக்கிள் ஓட்டி புதிய உலக சாதனைப் படைத்துள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!