கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முக்கிய அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முக்கிய அறிவிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முக்கிய அறிவிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முக்கிய அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி யின் மரணம் தமிழகத்தையே புரட்டி போட்டுள்ளது. மேலும் கலவரங்களும், வன்முறைகளும் தொடர்ந்த நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மாடியிலிருந்து இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களாக கலவரங்களும் போராட்டங்களும் நடைபெற்றிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள்,இளைஞர்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவி பயின்ற பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள், வகுப்பறைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இதற்கிடையில் மாணவியின் உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு நடத்த மருத்துவ குழு ஒன்றை அமைத்துள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று மாணவியின் தந்தைக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவியின் தந்தை சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வன்முறைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பதிலளித்தார்.

Exams Daily Mobile App Download

பள்ளி கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுமாறும்,வன்முறையின் பின்னணிக்கு யார் காரணம் என்றும் காவல்துறை தங்களது முழு அதிகாரத்தினை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த கலவரமானது திடீர் வன்முறை அல்ல திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று DGP-க்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here