CTET ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு – CBSE கல்வி வாரியம் வெளியீடு!

0
CTET ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு - CBSE கல்வி வாரியம் வெளியீடு!
CTET ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு - CBSE கல்வி வாரியம் வெளியீடு!
CTET ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு – CBSE கல்வி வாரியம் வெளியீடு!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE) ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வுகளின் 15ம் பதிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. அந்த வகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE) ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் தகுதித்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் முதல் துவங்குவதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) 15வது பதிப்பு டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – முக்கிய கோரிக்கை!

இந்த தகுதித்தேர்வானது கணினி சார்ந்த முறையில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் CTET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 20ம் தேதி முதலே நடைபெற்று வருகிறது. இதனுடன் CBSE கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வுகளுக்கான அட்டவணை CBSE வாரியத்தின் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேற்று (அக்.18) வெளியிடப்பட்டுள்ளது. இப்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

CBSE மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளின் முதல் பருவம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்பட இருக்கிறது. தேர்வு நடைபெறும் நேரம் 90 நிமிடங்கள் ஆகும். தொடர்ந்து டெர்ம் 2க்கான பொதுத் தேர்வுகளின் முதல் பருவம் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். இத்தேர்வுகள் அப்போது இருக்கும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து சப்ஜெக்டிவ் அல்லது அப்ஜெக்டிவ் தேர்வாக நடத்தப்படலாம்.

தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இப்போது CBSEன் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்குகிறது. தேர்வுகளை எழுதும் அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் வாசிப்பு நிமிடங்கள் 20 நிமிடங்களாக அளிக்கப்படும். தொடர்ந்து CBSE கல்வி வாரியம், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 114 பாடங்களையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 பாடங்களையும் வழங்குகிறது. அந்த வகையில் CBSE வாரியம், பொதுத்தேர்வுகளை மட்டும் மொத்தம் 189 பாடங்களுக்கு நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!