TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக தமிழகத்தில் உள்ள துறைகளில் தகுதியான நபர்களை நியமிக்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேர்வு குறித்த முழு விபரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 1 தேர்வு வருகிற ஜூன் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

இந்த மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய TNPSC தேர்வு குறித்த முழு விபரங்களை பற்றி பார்ப்போம்.

1. நான்காம் நிலை பணியாளர்களை நிரப்பும் குரூப் 4 தேர்வு குறித்த தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்படப்படுகின்றனர். TNPSCயின் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு. மேலும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இத்தேர்வுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 6 நாட்களே உள்ளன.

காலியிடங்களின் எண்ணிக்கை : 7304

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.04.2022

2. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நியமிக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2022

3. டேராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை

டேராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதற்கு 02 ஜனவரி 2010 முதல் 1 ஜூலை 2011க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. அதாவது இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

4. பொறியியல் சேவை தேர்வு

TNPSC தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணியில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் தகுதியான நபர்களுக்கு ரூ.37,700 முதல் ரூ.1,38,500 மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2022.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!